முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளார். இதில் விண்ணப்பிக்க மற்றும் பல தகவலை அறிந்திட பதிவை முழுமையாக படிக்கவும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளார். இதற்கு, விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளார். ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆதார் அட்டை பயன்படுத்தி Transaction செய்யலாம், இனி OTP தேவையில்லை
தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை ஆகியவற்றுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் 98401 15857, 72992 64999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய, இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும், 25 ஜோடிகளுக்கு அறநிலையத்துறை மூலம் இலவச திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திருமணத்தின் போது, மணமக்களுக்கு தங்க திருமாங்கல்யம் (2 கிராம்), புத்தாடைகள், மணமகன், மணமகள் வீட்டாருக்கு விருந்து உணவு, சீர்வரிசை பாத்திரங்கள், பூமாலைகள் அகியவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க:
இந்தியா தலைமையில் ஜி-20 மாநாடு: தினை ஆண்டு 2023
20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி
Share your comments