தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் வங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு, இந்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவை எந்த பணியிடங்கள் என்பதை, இப்போது பார்ப்போம்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு:
2022 ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பட்டதைத் தொடர்ந்து, அத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கி இருப்பது குறிப்பிடதக்கது. இதற்கு jeemain.nta.nic.in, என்ற இணையதள பக்கம் மூலமாக விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25-04-2022.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி 26-04-2022 ஆகும்.
இந்திய பொருளாதார சேவை:
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) இந்திய பொருளாதார சேவை அல்லது இந்திய புள்ளியில் சேவை எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsconline.nic.in/ என்ற பக்கத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26-04-2022.
குரூப் 4 தேர்வு:
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 தேர்வு அறிவிப்பும் வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தேர்வு மூலம் 7000க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022 ஆகும்.
TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்:
தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022 ஆகும். இது குறித்து மேலும் தகவல் அறிய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
UET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு:
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை ஆரம்பித்துவிட்டது. இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022 ஆகும்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி:
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 145 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடதக்கது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2022 ஆகும்.
புலனாய்வு அதிகாரி (Investigating Officer):
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுப் பணியகத்தில் உதவி புலனாய்வு அதிகாரிகளுக்கான தொழில்நுட்பம் சார்ந்த (Assistant Central Inteligent officer- Grade II/Technical) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 150 ஆகும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.05.2022 என்பது குறிப்பிடதக்கது.
உதவி கமாண்டன்ட்:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.05.2022 என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
மீண்டும் சிறந்த கிராம ஊராட்சிக்கு உத்தமர் காந்தி விருது: அறிமுகம்
Share your comments