1. செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க- மேலும் காலஅவகாசம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Apply for NEET Exam- More Time!

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒரு முறைக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.

2022-23-ஆம் கல்வி ஆண்டில் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி முதல் நடைபெற்று வருகிறது.

நீட்டிப்பு (Extension)

தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 20 வரை (Until May 20)

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டிந்த காலக்கெடு, மே6ம் தேதியில் இருந்து ஏற்கனவே, மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

English Summary: Apply for NEET Exam- More Time! Published on: 16 May 2022, 11:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.