நபார்டுடன் பணியாற்ற விரும்புவோருக்கு ஓர் நல்ல வாய்ப்பு! சைபர் பாதுகாப்பு மேலாளர், திட்ட மேலாளர், நீர் வள மேலாண்மை, காலநிலை ஸ்மார்ட் வேளாண்மை / மண் மற்றும் நில மேலாண்மை உள்ளிட்ட பணியிடங்களுக்கு சிறப்பு ஆலோசகரை நியமிப்பதற்கான அறிவிப்பை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க...
நபார்டு அறிக்கையின் படி, சிறப்பு ஆலோசகர் பதவிகளை நிரப்புதல் என்பது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் NABARD - www.nabard.org இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்ட விண்ணப்பபடிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 20 மார்ச் 2021.
விண்ணப்பிக்க நிபந்தனைகள்
-
விண்ணப்பிப்பதற்கு முன், தேர்வர்கள் அனைத்து விதிமுறைகளையும் சரியாகப் படித்து, பதவிக்கான தகுதிகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
-
ஆன்லைன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேர்வு கட்டணத்துடன் நபார்டு தேர்வர்களை தேர்ந்தெடுக்கும்.
-
மேலும் நேர்காணல் அல்லது பணி சேரும்போது அவர்களின் தகுதியை சரிபார்க்கும்.
-
எந்தவொரு கட்டத்திலும், ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் தவறானவை எனக் கண்டறியப்பட்டால் அல்லது தேர்வர் பதவிக்கான தகுதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், அவரது விண்ணப்பப்படிவங்கள் ரத்து செய்யப்படும்.
யார் விண்ணப்பிக்க முடியும்?
நபார்டு சிறப்பு ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2021க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், துறை சார்ந்த / பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் அல்லது பாடத்தில் முதுநிலை அல்லது பிஎச்டி (PhD) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதனுடன், தொடர்புடைய பணி அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், நபார்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். பின்னர் தொழில் வேலைவாய்ப்பு பிரிவில் கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். தேவையான கட்டணங்களை செலுத்தி சமர்ப்பிக்கவும்.
இப்போதே நேரடியாக விண்ணப்பிக்க...
நபார்டு (NABARD)
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) என்பது அகில இந்தியாவிற்குமான வேளாண் உச்ச அமைப்பு ஆகும், இது முற்றிலும் இந்திய அரசுக்கு சொந்தமானது மற்றும் தன்னாட்சி சுதந்திரம் பெற்ற ஒரு அமைப்பாக இருந்து வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சுயதொழில் தொடங்க மானியத்துடன் முத்தான மூன்று திட்டங்கள்! இளைஞர்களுக்கு அழைப்பு!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!
Share your comments