UIDAI எனப்படும் ஆதார் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Director General & Deputy Director பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதார் நிறுவனத்தில் Assistant Director General & Deputy Director பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் (Job Place)
தேர்வு செய்யப்பட்டால் லக்னோ, டெல்லி, பெங்களுர் மற்றும் மும்பை நகரங்களில் பணி வழங்கப்படும்.
கல்வித்தகுதி (Education Qualification)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு, மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு
வயது வரம்பு (Age limit)
விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
ஊதிய விவரம் (Salary)
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 1,12,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு (Exam)
விண்ணப்பதாரர்கள் Test/ interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த கூடுதல் தகவல்களை அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி (How to Apply)
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் uidai.gov.in என்ற இணையதளத்ல் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடைசி தேதி (Last Date)
16.10.2020
மேலும் படிக்க...
FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
Share your comments