தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் உள்ள தனுஷ்கோடியில், கடந்த ஜூன் 15 ஆம் நாள் துருவப் பகுதிகளில் ஆர்க்டிக் ஸ்குவா என்ற பறவை காணப்பட்டது. இப்பறவை நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தூத்துக்குடி மற்றும் பழவேற்காட்டில் தென்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தனுஷ்கோடியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பறவை, இந்த ஆண்டு தான் முதன்முறையாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பு (Birds Survey)
மன்னார் வளைகுடா பகுதியில் வாழும் மற்றும் அங்கு வலசைப் போதலுக்கு வரும் பறவைகளைப் பற்றிய ஆய்வுகளை 2015 ஆம் ஆண்டு முதல் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, பறவைகள் கணக்கெடுப்புப் பணியை இவர்கள் செய்து வருகின்றனர். அதே போல இந்த ஆண்டும், பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், ஆச்சரியமூட்டும் வகையில் ஆர்க்டிக் ஸ்குவா தமிழகத்திற்கு வந்திருப்பது தெரிய வந்தது.
ஆர்க்டிக் ஸ்குவா (Arctic squaw)
ஆர்க்டிக் ஸ்குவா பறவை, பூமியின் வடதுருவ முனையில் உள்ள ஆர்க்டிக்கிலும், தென்துருவ முனையில் உள்ள அன்டார்டிக்காவிலும் இனப்பெருக்கம் செய்பவை. இவை தமிழ்நாட்டில் இதுவரை காணப்பட்டதில்லை. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தூத்துக்குடியிலும், மே மாதத்தில் சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு பகுதியிலும் காணப்பட்டது.
மழைப் பொழிவு மற்றும் புயல் ஆகியவற்றை பறவைகள் நமக்கு முன்பே கணிக்கும். அந்த நேரத்தை ஒட்டியும் பறவைகள் வலசை போகும். இதுபோக, சில சமயங்களில் வலசை போகும் சில பறவைகள், அவற்றின் பாதையிலிருந்து திசை மாறி வரக்கூடும். பழவேற்காடு, தனுஷ்கோடி பகுதிகளில் காணப்பட்ட ஆர்க்டிக் ஸ்குவா, அப்படி திசை மாறி வந்தவையாகக் கூட இருக்கலாம். இது தென்மேற்குப் பருவ காலம் என்பதால், மேற்கு கடல் பகுதி வழியாக அவை பறக்கும் போது, கடல் நீரோட்ட திசை மற்றும் புயல் போன்ற காரணங்களால் அவை திசைமாறி, தமிழ்நாடு பக்கமாக வந்திருக்க கூடும் என்று பறவைகள் கண்காணிப்பாளர் பைஜூ கூறினார்.
மேலும் படிக்க
இந்த நாட்டில் கால்நடை வளர்ப்போருக்கு வரிவிதிப்பு காரணம் என்ன தெரியுமா?
சீமைக்கருவேல மரத்தை அகற்ற இயந்திரம் கண்டுபிடிப்பு: மதுரை மாணவி அசத்தல்!
Share your comments