வங்கியில் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கனரா வங்கி அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணி வங்கி நிறுவனமான கனரா வங்கி (Canara Bank) தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு திடீரென வட்டியை (Interest) உயர்த்தியது.
கடன் வட்டி விகிதம் குறைவு:
அண்மையில் கனரா வங்கி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதத்தை (Loan interest rate) குறைத்து. இந்த திட்டம் மூலம் பல பயனர்கள் பலனடைந்தனர். இந்தநிலையில், தற்பொழுது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை உயர்த்துவதாக அறிவித்தது. இதுகுறித்த ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) கொள்கை கூட்டத்தில், ரெபோ விகிதம் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு:
ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி குறையாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்படுவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்த திட்டம், 27ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே 5.40% வட்டி உயர்வு வழங்கப்படும். அதுமட்டுமின்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு 5.90% வட்டி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மற்ற வங்கிகளை விட, கனரா வங்கி அதிக வட்டியை வழங்குகிறது.
கனரா வங்கியின் இந்த திட்டம், வங்கயில் சேமிப்பவர்களுக்கு மிக நல்ல செய்தியாகும். இத்திட்டத்தால் வட்டியின் மூலம் தங்கள் வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்!
Share your comments