சிறிய அளவிலாவது சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். ஏனெனில் சொற்ப லாபம் கிடைத்தாலும், நாமே முதலாளியாக இருப்பதில் அத்தனை சுகம் இருக்கிறது.
அந்த வகையில் முன்பு நகரங்களில் வேலைபார்த்து, கொரோனாவால், சொந்த கிராமங்களுக்கு புலம்பெயர்ந்தவராக நீங்கள்?
உங்கள் ஊரிலேயே சிறியஅளவில், குறைந்த முதலீட்டில் வியாபாரம் செய்ய சில யோசனைகள் இதோ!
1. காய்கறி மற்றும் பழக்கடை (Vegetable Shop)
இதனைத் தொடங்க தனியாக எந்தத் திறமையும் தேவையில்லை. குறிப்பாக வாடிக்கையாளர்களைக் கவரும் யுக்தியை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். அருகில் உள்ள சந்தையில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்து, குறைந்த லாபம் வைத்து விற்பனை செய்யலாம். உங்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
2. கூல் டிரிங்ஸ் (அல்லது) டீக் கடை (Cool Drinks or Tea chop)
கோடை காலங்களில் கூல் டிரிங்ஸ் கடை வருமானத்தை வாரி இறைக்கும். அதேநேரத்தில் டீக்கடை குளிர்காலத்தில் வருவாயைக் கொட்டிக் கொடுக்கும். மேலும் இவை அனைத்தும் அத்தியாவசியமானவையாக மாறிவிட்டது. எனவே இந்த தொழிலில் நல்ல லாபம் பார்க்க இயலும்.
3. கால்நடைத் தீவனக் கடை
மாடுகள் மற்றும் கோழிகளுக்குத் தேவையான தீவனங்களை மொத்தமாக வாங்கி வந்த சில்லறை விலையில் விற்கலாம். இந்த தொழில் நிரந்தரமாக வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும்.
மேலும் படிக்க ...
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!
Share your comments