கடலுார் மாவட்டத்தில், வேப்பூரில் அமைக்கப்பட உள்ள உணவு பூங்காவில் (Food Park), உணவுப் பதப்படுத்துதல் அலகுகள் அமைக்க, உணவுப் பொருள் தயாரிப்பு முதலீட்டாளர்கள் (Investors) விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஏக்கரில் உணவு பூங்கா:
மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் உணவு பதப்படுத்துதல் தொகுப்பு திட்டத்தில் (food processing package program), தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக வேப்பூர் வட்டத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா (Food Park) அமைக்கப்பட உள்ளது. இங்கு, வாழைப்பழ மதிப்பு கூட்டு பொருட்கள், பால் பதப்படுத்துதல், மக்காச்சோளம் மதிப்பு கூட்டு பொருட்கள், கரும்பு வெல்லம் தயாரிக்கும் அலகு, மணிலா வெண்ணெய் தயாரிக்கும் அலகு ஆகியவை அமைக்க குத்தகை (Leasing) அடிப்படையில் 5 உணவு முதலீட்டாளர்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் நிலம் வழங்கப்பட உள்ளது.
உணவுப் பூங்காவில் உள்ள வசதிகள்:
உணவு பூங்கா வளாகத்தில் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் உட்புற சாலைகள், தண்ணீர், மின்சாரம் வசதி, சுற்றுப்புற சுவர், எடைமேடை, சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, ஆய்வுக் கூடம், ஓய்வறை, கனிய வைத்தல் அறை ஏற்படுத்தப்பட உள்ளது.
முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள உணவு பொருள் தயாரிப்பு நிறுவன முதலீட்டாளர்கள் விண்ணப்பங்களை (Application), கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செயலாளர்,
கடலுார் விற்பனைக்குழு,
நெ., 1, ஜட்ஜ் பங்களா ரோடு,
மஞ்சக்குப்பம், கடலுார்-1.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தரமற்ற எண்ணெய் அதிகளவில் விற்பனை! ஆய்வில் கண்டுபிடிப்பு!
இனிப்பு வகைகளைப் பரிசோதிக்க, நடமாடும் உணவுப் பரிசோதனை கூடம்!
Share your comments