1. செய்திகள்

எல்ஐசி-இல் கேட்டால் கொடுக்கப்படும்: கிடப்பில் கிடக்கும் ரூ 21ஆயிரம் கோடி!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Ask at LIC: Rs 21,000 crore lying dormant!

எல்ஐசி காப்பீடு நிறுவனத்தில் 2021, செப்டம்பர் மாதம் வரை, ரூ.21 ஆயிரத்து 539 கோடி கேட்பாரின்றி கிடப்பதாக தெரியவந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் சமீபத்தில் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் பங்குவிற்பனைக்காக தாக்கல் செய்த வரைவு அறிக்கையில், இந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறது.

யாரும் உரிமைகோரப்படாமல் இருக்கும் ரூ.21,539 கோடிக்கும் மாதந்தோறும் வட்டியும் கிடைத்து வருகிறது.

மத்திய அரசு, எல்ஐசி நிறுவனத்தில் அரசு தனக்கிருக்கும் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை செய்ய உள்ளது. இதற்காக கடந்த வாரம் எல்ஐசி நிறுவனம் டிஆர்ஹெச்பி எனப்படும் வரைவு அறிக்கையை செபியிடம் சமர்ப்பித்தது.

இதில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எல்ஐசி நிறுவனத்தில் யாரும் உரிமை கோரப்படாமல் ரூ.18 ஆயிரத்து 495 கோடியும், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் ரூ.16 ஆயிரத்து 52 கோடியும் இருந்ததாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.13 ஆயிரத்து 843 கோடி இருந்தது எனத் தெரிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாலிசிதாரர்களால் உரிமை கோரப்படாமல் கோடிக்கணக்கில் சேர்ந்துவருவது, குறிப்பிடதக்கது.

அதாவது எல்ஐசியில் பாலிசி எடுத்து, அதை முறையாகக் கட்டாமல் வைத்திருப்பது, பாலிசி ப்ரீமியம் தொகையை செலுத்தாமல் அபாரதத்துடன் செலுத்த வேண்டும் என்பதால், செலுத்தாமல் கிடப்பில் போட்டு வைப்பது, பாலிசி தொகை செலுத்தி அதை முடிக்கமுடியாமல் காலாவதியாக இருப்பது போன்று பல்வேறு வகைகளில் இந்த தொகை கேட்பாறின்றி கிடப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.

ஒவ்வொரு பாலிசி நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பாலிசிதாரர்களால் உரிமை கோரப்டாமல் இருந்தால் அதன் விவரங்களை அவர்களுக்கு தெரிவிப்பது, அவசியமாகும். அதேபோல, பாலிசிதாரர்கள் தங்களின் பாலிசி குறித்தும் கேட்பாறின்றி இருக்கும் தொகையில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும் உரிமைகள் உண்டு.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிசிதாரர்களால் கேட்பாறின்றி பணம் இருந்தால், அந்தத் தொகை மூதியோர் நலன் நிதிக்காக மாற்றப்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இதற்காக ஐஆர்டிஏ தனியாக விதிமுறை உருவாக்கி இருக்கிறது. மத்திய நிதி அமைச்சகத்துக்கு உட்பட்ட பொருளதார விவகாரத்துறையும் முதியோர் நலன்நிதி சட்டம் என்ற பிரிவையும் அமைத்துள்ளது. ஆதலால், எல்ஐசியில்கேட்பாறின்றி கிடக்கும் இந்த ரூ. 21,500 கோடியில் 10ஆண்டுகள் நிறைந்த பாலிசிதாரர்களின் தொகை முதியோர் நலன்நிதிக்கு மாற்றப்படுகின்றன.

மேலும் படிக்க:

ஆடு வளர்ப்பின் முதல் கட்டத்தில், நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்

மீண்டும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு, இந்திய அரசு தடை!

English Summary: Ask at LIC: Rs 21,000 crore lying dormant! Published on: 16 February 2022, 05:19 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.