வெங்காயத்தின் அனைத்து ரகங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு திடீர் தடை விதித்து அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உடனடியாக அமல் (Effective immediately)
அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் (DGFT) வெளியிட்ட அறிக்கையில்,
அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். வெங்காய விலை நாளுக்கு அதிகரித்து வருவதாலும், உள்நாட்டுச் சந்தைகளில் பற்றாக்குறை இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்றுமதி அதிகரிப்பு (Export increase)
இந்தப் பற்றாக்குறை வழக்கமான ஒன்று தான் என்ற போதிலும், கொரோனா காலத்தில் கடந்த சில மாதங்களில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடப்பு 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 198 மில்லியன் டாலர் அளவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2019-20ம் முழு நிதியாண்டிலேயே 440 மில்லியன் டாலர் அளவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டில், இந்தியாவில் வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்த நிலையில், மத்திய அரசு தடைவிதித்தது. அத்துடன் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய முக்கிய வெங்காயம் விளையும் மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு குறைந்த பட்ச ஏற்றுமதி விலையாக 850 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்தக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, கடந்த மார்ச் மாதத்தில் நீக்கம் செய்யப்பட்டு, வெங்காயங்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
அதேநேரத்தில் மார்ச் மாதத்திற்குப் பின்பு உள்நாட்டில் விற்பனை சரிவடைந்த நிலையில், ஏற்றுமதி கணிசமாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது மீண்டும் வெங்காயத்திற்கு தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் வேளாண் பட்டயப்படிப்புகள்- மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது!
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
Share your comments