இளைய தலைமுறையினரைச் சீரழிக்கும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்படுவோர், தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
எனவே இத்தகையத் தற்கொலைகளைத் தடுக்கும்வகையில், எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
கமிட்டி
இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
அறிக்கைத் தாக்கல்
அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!
Share your comments