இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒமைக்ரான் (Omicron) பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்று (Omicron Virus)
இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா கடற்கரையில் (Chennai Merina Beach) நாளை முதல் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தடை (Public Should not go)
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை கடற்கரையின் மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும், பிரத்யேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு (Walking) மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ஒமைக்ரான் தொற்றுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு!
இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!
Share your comments