இந்தியில் உள்ள மத்திய அரசு திட்டங்களின் பெயரை அப்படியே தமிழில் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது . ஏழை , எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயரிடப்படும் திட்டத்தின் பெயரை தமிழகத்தில் செயல்படுத்தும்போது அந்த திட்டத்தின் பொருள் புரிந்து தமிழில் மொழியாக்கம் செய்யாமல், இந்தி மொழியில் அந்த திட்டத்தை எவ்வாறு அழைக்கிறார்களோ, அதேபோல் தமிழகத்திலும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இதனால் மத்திய அரசின் திட்டத்தின் பெயர் என்ன? அதன் நோக்கம் என்ன? என்று அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்துகொள்ள இயலவில்லை. இதனால் இந்த திட்டங்கள் முழுமையாக அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடையவில்லை.
உதாரணமாக. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா, ஸ்வச் பாரத், ஜல் சக்தி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்தி மொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் பெயரை தமிழில் மொழியாக்கம் செய்து அதன் பொருள் புரிந்து தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும். ஆனால் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை அப்படியே தமிழில் மொழியாக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்தி மொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் பெயரை தமிழில் மொழியாக்கம் செய்து அதன் பொருள் புரிந்து தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும். ஆனால் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை அப்படியே தமிழில் மொழியாக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, (பிரதமரின் மக்கள் நிதி திட்டம்), பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீட்டுத் திட்டம்) பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பயிர் காப்பீட்டுத்திட்டம்), பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா (மலிவு விலை மருந்து கடைகள் திட்டம்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற பல திட்டங்களும் தமிழ்நாட்டில் இந்தி பெயரிலியே செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு, எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?
Share your comments