கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், வங்கி மோசடிகள் அதிகரித்திருப்பதாக, ரிசர்வ் வங்கி (RBI) அறிக்கை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும், மொத்தம் 36 ஆயிரத்து, 342 கோடி ரூபாய் மதிப்பிலான 4,071வங்கி மோசடிகள் நடைபெற்றிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 3,499 மோசடிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
வங்கி மோசடி (Bank frauds)
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது மோசடிகளின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் அதிகரித்திருந்த போதும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 64 ஆயிரத்து, 261 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் நடைபெற்றிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இதே காலத்தில், 36 ஆயிரத்து 342 கோடி ரூபாய் எனும் அளவுக்கே நடைபெற்றிருக்கிறது. இவற்றில், கடன் சம்பந்தப்பட்ட மோசடிகள் 1,802. இவற்றின் மதிப்பு 35 ஆயிரத்து 60 கோடி ரூபாய்.
கார்டு மற்றும் இன்டர்நெட் ஆகியவை சம்பந்தமாக, 60 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,532 மோசடிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மோசடிகள், தனியார் வங்கிகளில் நடைபெற்றுள்ளன. இருப்பினும், அதிக பண மதிப்பிலான மோசடிகள், தனியார் துறையை விட பொதுத்துறை வங்கிகளில் அதிகம் நடைபெற்றுள்ளன.
மேலும் படிக்க
ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி!
Share your comments