1. செய்திகள்

ஊரடங்கால் வங்கி வேலை நேரம் குறைப்பு! - வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

வங்கி வேலை நேரம் குறைப்பு

தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.

ரொக்கப் பரிவர்த்தனை, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு என்.இ.எப்.டி. எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை வழங்க வேண்டும். அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

English Summary: Bank working hours time reduced till 13th june due to covid curfew

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.