நம் ஊர்களில் காணப்படும் குளம், குட்டை மற்றும் ஏரிகளில் வாழும் உள்ளூர் மீன் இனங்களை உண்டு வாழும் ஆப்ரிக்க கெளுத்தி மீன் இனங்களை வளர்க்க வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வகை மீன்கள் நம் ஆரோக்கிய வாழ்வுக்கும் நாட்டின் வளத்திற்கும் கேடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்
குளம், குட்டை, மற்றும் ஏரியில்ல வாழும் மீன்களின் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் உள்ளூர் கெளுத்தி மீன் இனங்களை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை. சுவையாகவும் சத்தானதும் என கண்டறியப்படுள்ளது. ஆனால், அண்மைக் காலமாக நமது நீர்நிலைகளில் ஆப்ரிக்க கெளுத்தி மீன் இனங்களை பலரும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இவை மிகவும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை மீன்கள் ஒரே சீசனில் 4 லட்சம் முட்டைகள் இடக் கூடியவை. ஆனால், நம் நாட்டு கெளுத்தி மீன்கள் 15,000 முட்டைகள் வரைதான் இடும். அதிக முட்டைகளை இடும் இந்த ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் நாளடைவில் பல்கி பெருகி நம் நாட்டு மீன் இனங்களே அழித்து விடும்.
மீன் வளர்ப்பிற்கு தடை
ஏனென்றால், இந்த ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் பிற மீன் இனங்களை உண்டு வாழக்கூடியதுடன், தன் இனத்தை சேர்ந்த மீன்களையும் சாப்பிடும் குணம் கொண்டது. சாக்கடை நிறைந்த தண்ணீரிலும் , காற்றை குடித்து கூட உயிர் வாழும் திறன் கொண்டது. இதனால், இந்த மீன்களை மனிதர்கள் உண்பதும் ஆபத்தானது என்கிறார்கள். ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
வேளாண் துறை சார்பில் கால்நடை முகாம்! கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு
குழிதோண்டி புதைக்கப்பட்ட மீன்கள்
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் பல இடங்களில் ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாகலூர் புதிநாத்தம், முத்தாலி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆப்ரிக்க கெளுத்தி மீன் பண்ணைகளில் இருந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்றி இந்த கெளுத்தி மீன்களை பிடித்து மண்ணில் குழி தோண்டி புதைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!
Share your comments