வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்த பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி 7 % அதிகரித்து உள்ளதாக (APEDA) தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டிற்கான முதல் அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் உணவு பொருட்கள் ஏற்றுமதியானது 7 % அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் (2017-2018) நடப்பு ஆண்டில் ரூ 1.28 கோடி அதிகரித்துள்ளது. குறிப்பாக பால் சார்த்த பதப்படுத்த பட்ட பொருட்கள், பருப்பு வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட சற்று குறைந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களின் ஏற்றுமதி Rs 1,955 கோடி , இல் இருந்து Rs 3,376 கோடியாக உயர்ந்துள்ளது. அதே போன்று பருப்பு வகைகள் Rs 1,470 கோடியில் இருந்து Rs 1,795 கோடியாக உயர்ந்துள்ளது. பால் பொருட்கள் 72%, பருப்பு வகைகள் 22% வளர்ச்சி அடைந்துள்ளது. மஹாராஷ்டிர மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சியினால் பருப்பு ஏற்றுமதி குறைந்துள்ளதாக வேளாண் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாசுமதி ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ரூ 26,871 கோடியாக இருந்து Rs 32,806 கோடியாக உயர்ந்துள்ளது. மற்ற வகை அரிசிகளின் ஏற்றுமதி சற்று குறைந்தே உள்ளது. அதே போன்று கோதுமையின் ஏற்றுமதியும் குறைத்துள்ளது. கோதுமையினை ஏற்றுமதியனில் ரஷ்யா மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்தியர்களை விட மிகக்குறைந்த விலையில் வழங்குவதே இதற்கு காரணமாகும்.
புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையின் படி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை உரமிட்டு வளர்க்கப்பட்ட பொருட்களுக்கு உலக சந்தையினில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே மாநில அரசுகள் இதனை முறையாக ஊக்குவித்து வந்தால் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் என வேளாண் நிர்வாகம் கூறியது.
Share your comments