இந்தியாவில் போலியான அடையாள அட்டைகளை கொடுத்து சிம் கார்டு வாங்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
புதிய சிம் கார்டு (New Sim Card)
இந்தியாவில் இன்றைக்கு மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலியான அடையாள அட்டைகளை காண்பித்து சிம் கார்டு வாங்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் புதிய சிம் கார்டு பெறுபவர்கள் தங்களது அடையாள ஆவணத்தை காண்பித்து அதன் அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சிம் கார்டு வழங்கப்படும்.
இந்த நிலையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடு முழுவதும் பலர் சிம்கார்டு பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தவறான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியிருந்தால் அவர்களின் மொபைல் எண் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை போலி ஆதாரங்களை காண்பித்து சிம் கார்டு பெற்ற 15 லட்சம் மொபைல் எண்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது பிளாக் செய்யப்பட்டுள்ள எண்கள் சில நாட்களுக்கு பிறகு வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க
ஏப்ரல் முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு: வெளியான நற்செய்தி!
MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Share your comments