ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கொரோனா பாதிப்பு சற்றுக் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து, தமிழகத்தில் ஓரளவுக்கு இயல்புவாழ்க்கை திரும்பி வருகிறது. அதற்கு ஒமிக்ரான் அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனிடையேத் தமிழகத்தில் வரும் 15-ந் தேதியுடன் கொரோனா ஊரடங்கு உத்தரவு காலம் முடிவடைய உள்ளது. அதேநேரத்தில் கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை
இந்நிலையில், கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
ஊரடங்கு நீட்டிப்பு (Curfew extension)
இதன் அடிப்படையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
தடை (Prohibition)
-
இதன்படி, சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
-
அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.
-
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
வகுப்புகள் ரத்து (Cancel classes)
ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்.
அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி வழக்கம்போல் செயல்படும்.
மேலும் படிக்க...
தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை: இனி வரும் பெருந்தொற்றுகள் ஆபத்தானதாக இருக்கும்!
கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!
Share your comments