மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஒளிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனமான (BECIL) - ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
(BECIL) - ல் நிறுவனத்தில் காலியாக உள்ள திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியாளர்கள், கன்சல்டன்ட் பணியாளர்கள், கணக்கியல் படித்தவர்கள் என பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடைப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
காலி பணியிடங்கள்
திறன் சார்ந்த பணியாளர்கள் - 1,336
திறன் சாராத பணியாளர்கள் - 1,342
கன்சல்டன்ட் பணியாளர்கள் - 04
அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் - 02
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 10.07.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2019
விண்ணப்பக் கட்டணம்
பொது / பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.250
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை
விண்ணப்பக் கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited, payable at New Delhi என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். குறிப்பாக கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் பதிவுக்கட்டணத்தை செலுத்தலாம்.
Account Holder's Name : BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED
Name of the Bank : CORPORATION BANK
Account No. : 510341000702746
IFSC : CORP0000371
Branch Address : CORPORATION BANK, CGO COMPLEX, LODHI ROAD, NEW DELHI-110003
ஊதிய விவரம்
- பணியின் அடிப்படையில் ஊதியமானது மாறுபடும்.
- திறன் சார்ந்த பணியாளர்கள் - குறைந்தபட்ச ஊதியமாக ரூ.9,381 நிர்ணயிக்க பட்டுள்ளது.
- திறன் சாராத பணியாளர்கள் - குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,613 நிர்ணயிக்க பட்டுள்ளது.
- கன்சல்டன்ட்- ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை
- அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் - குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை
வயது வரம்பு
திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத பணியாளர்கள் - 18 வயது முதல் 45 வயது வரை
பணிகளை பொறுத்து வயது வரம்பிலும், ஊதியதிலும் மாற்றங்கள் உண்டு.
கல்வித்தகுதி
- திறன் சார்ந்த பணியாளர் பணிகளுக்கு, எலக்ட்ரிக்கல் டிரேட் மற்றும் வையர்மேன் போன்ற துறையில் ஐடிஐ சான்றிதழ் அல்லது டிப்ளமோ சான்றிதழ் மற்றும் குறைந்தபட்சமாக 2 வருட பணி அனுபவம் வேண்டும்.
- திறன் சாராத பணியாளர் பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு மற்றும் 1வருட பணி அனுபவம் வேண்டும்.
- கன்சல்டன்ட் பணிகளுக்கு குறைந்தபட்சமாக பி.டெக் (எலக்ட்ரிக்கல்ஸ்) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடிவ் பணிகளுக்கு குறைந்தபட்சமாக பி.காம் அல்லது அதிகபட்சமாக எம்.காம் / எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.becil.com/vacancies அல்லது www.beciljobs.com - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், இது குறித்த முழுமையான தகவல்களைப் பெற https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf5e206875495213e87fe49cd6f968b5d0.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments