1. செய்திகள்

பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்

KJ Staff
KJ Staff
S. Jaishankar (External Minister)

புதிய வசதிகளுடன் கூடிய சிப்  பாஸ்போர்ட்  விரைவில் அறிமுகம் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை இந்தியா செக்யூரிட்டி பிரஸ் (ESP) செய்ய உள்ளது.

மத்திய அரசு எல்லா துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ள பாஸ்போர்ட்டை  அறிமுக படுத்துவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தற்பொழுது வங்கிகள் முழுவதும் சிப் பொருத்த பட்ட (ATM) கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அதே போன்று இப்பொழுது பாஸ்ப்போர்ட்டிலும் சிப் பொருத்தப்படுவதற்கான பணிகளை (ESP) செய்ய உள்ளது. 

New Passport

சிப்  பாஸ்போர்ட் புத்தகத்தில் பொருத்தபடும். இதில் இடம் பெறும் தகவல்களை திருத்தவோ, அழிக்கவோ இயலாது. இதன் மூலம்  பாஸ்போர்ட் மேலும் பாதுகாக்க பட்டதாக அமையும்.

மத்திய அமைச்சகம் மற்றும் தபால் நிலையம் பாஸ்போர்ட் வழங்கம் சேவையை செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் பெற்று செல்கின்றனர். பெருகி வரும் தேவையினாலும், தவறாக பயன் படுத்துவதை தவிர்க்கவும் இந்த சிப் உதவும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே சிறந்த பாஸ்போர்ட் சேவை வழக்கும் மையங்களுக்கு விருது வழங்க பட்டது. இதில் முதல் இடத்தை  ஜலந்தர் பாஸ்போர்ட் சேவை மையமும் அதை தொடர்ந்து கொச்சின் மற்றும் கோயமுத்தூர் சேவை மையமும் இடம் பெற்றது, சேவை மையங்களின் எண்ணிக்கை மேலும் உயர்த்த படும் என்றும் அத்துடன் காவல்துறை சரிபார்ப்பதற்கான அவகாசம் மேலும் குறைக்கப்படும் என்றார். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Central Government Going To Lunch New Passport With Chip Facility

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.