1. செய்திகள்

மண் வளத்தைக் காக்கும் தக்கை பூண்டு சாகுபடி நன்மைகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Benefits of Green manure

விவசாயம் செழிக்க மண்வளம் காக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம், பெரும்பாலும் ரசாயன உரங்களே பயிர் பாதுகாப்புக்கும், நல்ல விளைச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக தக்கை பூண்டினை இயற்கையான பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தலாம்.

தக்கை பூட்டினை நிலத்தில் பயிரிட்டுப் பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும் இதனால் மண்வளம் பெருகும் என்கிறார் இயற்கை விவசாயி ஸ்ரீதர் அவர்கள்...

சாகுபடி நன்மைகள் 

 • அனைத்து வகையான மண்ணில் வளரக் கூடிய தாவரம்.

 • பல ஆண்டுகளாக மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது.

 • வறட்சி தாங்கி வளரும். எந்த தாவரமும் வளராத களர் மண்ணில் கூட சாதாரணமாக வளரும். மழை பெய்யும் காலங்களில் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.

 • ஏக்கருக்குப் பன்னிரெண்டு முதல் பதினைந்து கிலோ விதைகள் தேவை. இதனை அதிகமாக நெல் பயிரிடும் விவசாயிகள் விளைநிலம் காலியாக இருக்கும் போது விதைத்து விடுகின்றனர்.

 • ஐம்பது நாளில் கிட்டத்தட்ட ஐந்து அடி உயரம் வரை வளர்ந்து பூ விட்டு பிஞ்சு வர ஆரம்பிக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும்.

 • அதற்கு மேல் தாமதித்தால் தண்டு நார் பிடித்துவிடும். இதனால் இயந்திரம் கொண்டு உழும் போது துண்டாகாமல் சிக்கிக் கொள்ளும்.

 • இதையே தொண்ணூறு நாட்களுக்கு மேல் விட்டு வைத்தால் காய்கள் நன்கு முற்றி விதைகளை அறுவடை செய்யலாம். பல விவசாயிகள் அரசு வேளாண்மைத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் விதைகளை விற்பனை செய்கின்றனர்.

மண்ணில் மடக்கி உழும் போது கிடைக்கும் நன்மைகள்

 • களர் தன்மை மாறுகிறது. தொடர்ந்து விதைப்பதால் களர் தன்மை முற்றிலும் மாறும்.

 • மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது.

 • மண்ணில் கரிமச் சத்து அதிகரிக்கும்.

 • மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும்.

 • மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.

 • மண்ணில் நுண்ணுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாகப் பெருகும். மண் புழுக்கள் எண்ணிக்கை உடனே உயரும்.

 • கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும். அதிக புரோட்டீன், ஆமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். இதனால் கால்நடைகள் அதிக பால் கொடுக்கும், ஆடுகள் மற்றும் முயல்களுக்கு இது நல்ல தீவனமாக இருக்கும்

 • இதனுடன் சின்ன சோளம், கம்பு இவற்றை தலா மூன்று கிலோ உடன் கலந்து அளிப்பதன் மூலம் மண் நன்கு வளப்படும். இதற்கு காரணம் இவற்றின் வேர்களில் இயற்கையாகவே உள்ள வேம் என்னும் வேர் பூஞ்சாணம்

 • சேறு கலந்து நெல் நாற்று நடும் வயல்களில் இதை விதைத்து உழுது நாற்று நடுவது சிறப்பு.

தகவல்
ஸ்ரீதர், இயற்கை விவசாயி
சென்னை, தொடர்புக்கு : 9092779779.

மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!

முருங்கையை தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!

English Summary: Benefits of Using Green manure to Preserve Soil Fertility

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.