மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று விவசாய சட்டங்களைக் (Agri Laws) கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் (Delhi) விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இரயில் மறியல், பாரத் பந்த், டிராக்டர் பேரணி (Tractor Rally) உள்பட பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர் விவசாயிகள். போராட்டம் தொடங்கி வரும் மார்ச் 26-இல் 4 மாதங்கள் முடிவடையப் போவதால், அன்றைய தினம் பாரத் பந்தை நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
மீண்டும் பாரத் பந்த்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர், வரும், 26ம் தேதி, 'பாரத் பந்த் (Bharath Banth)' நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து, விவசாய சங்க தலைவர் புடா சிங், டில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ரயில்வே துறை தனியார் மயமாவதை எதிர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து, வரும் 15ல், விவசாய சங்கத்தினர் பேராட்டம் நடத்த உள்ளனர்.அடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய சங்கத்தினர் போராட்டத்தை துவங்கி, வரும், 26ம் தேதியுடன், நான்கு மாதங்கள் நிறைவடைகின்றன. அன்றைய தினம், காலை முதல் மாலை வரை, நாடு முழுவதும் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் (Tractors) நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராக இருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் நேற்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என்று இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! அதிர்ச்சி தகவல்!
Share your comments