provide uninterrupted electricity
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தின் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
பாரத் பந்த் (Bharath Banth)
மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள், 28, 29ம் தேதிகளில், அதாவது நேற்றும், இன்றும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டம் நடத்தி வருகிறது.
மின்சார விநியோகம் (Electricity Produce)
அனைத்து மாநிலங்கள், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தின் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லை நிலையை உறுதிபடுத்த வேண்டும்.
மின்தட்டுப்பாடு புகார்களை நிவர்த்தி செய்ய 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மாற்றுத் திறனாளிகள் விருப்பத்தின் படி உபகரணம் தேர்வு செய்யும் திட்டம்!
Share your comments