உங்கள் மொபைல் எண்ணை உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் OTP இல்லாமல் கணக்கை மாற்ற முடியாது.
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநர் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தைக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் SBI-யில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராக இருந்து, வங்கி கிளையை மாற்ற விரும்பினால், SBI-யின் ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த வேலையை எளிமையாக செய்யலாம். எனவே, இப்போது இந்த வேலையைச் செய்ய கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்துள்ளது.
இந்த தகவலை SBI வங்கி தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது., "உங்கள் கணக்கை ஒரு கிளையிலிருந்து இன்னொரு வங்கி கிளைக்கு மாற்றுவதற்கு உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதை நீங்கள் உட்காந்த இடத்தில் இருந்தே செய்யலாம். YONO SBI, YONO Lite மற்றும் ஆன்லைன் SBI ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் வங்கி கிளையை மாற்றலாம்" என்று SBI ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
Twitter Link :https://twitter.com/TheOfficialSBI/status/1390611453523103744?ref_src=twsrc%5Etfw
ஆன்லைன் மூலம் வங்கி கிளையை மாற்றுவதற்கு முன் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:
இணைய வங்கி மூலம் உங்கள் SBI வங்கி கிளையை எளிதாக மாற்றலாம். இணைய வங்கி மூலம் SBI சேமிப்புக் கணக்கின் கிளையை மாற்றுவதற்கான கோரிக்கையை உள்ளிடுவதற்கு, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கியின் கிளையின் கிளைக் குறியீடு உங்களுக்குத் தேவைப்படும். மேலும், உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து இணைய வங்கியில் தொடங்க வேண்டும்.
SBI வங்கி கிளையை ஆன்லைனில் எப்படி மாற்றுவது:
- முதலில் SBI அதிகாரப்பூர்வ வலைத்தளமான onlinesbi.com இல் உள்நுழைக.
- 'Personal Bank' விருப்பத்தை சொடுக்கவும்.
- பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கிளிக் செய்க.
- இதற்குப் பிறகு உங்கள் திரையில் e-Service இருக்கும், அதைக் கிளிக் செய்க.
- Transfer Savings Account-யை சொடுக்கவும்.
- மாற்றப்பட வேண்டிய உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் IFSC குறியீட்டை எழுதுங்கள்.
- எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்து உறுதிப்படுத்தல் பொத்தானை அழுத்தவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும். அதை நிரப்பி பின்னர் உறுதிப்படுத்தவும்.
- சில நாட்களுக்குப் பிறகு, நீங்கள் கோரிய கிளைக்கு உங்கள் கணக்கு மாற்றப்படும்.
ஆன்லைன் செயல்முறை தவிர, யோனோ செயலி அல்லது யோனோ லைட் மூலம் உங்கள் கிளையை மாற்றலாம். உங்கள் மொபைல் எண்ணை உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் OTP இல்லாமல் கணக்கை மாற்ற முடியாது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, SBI அதன் அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் செய்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் கிளைக்குச் சென்று எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை.
மேலும் படிக்க..
SBI வங்கியின் Rupay அட்டைதாரர்களுக்கு ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு - SBI வங்கி அறிவிப்பு!
SBI வங்கியில் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?- விபரம் உள்ளே!
SBI PPF சுப்பர் ஸ்கீம் : மாதத்திற்கு ரூ .9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ .28 லட்சம் ரிட்டன் !
Share your comments