கிஷான் கிரெடிட் கார்ட் (Kishan Credit Card) மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) தெரிவித்துள்ளார்.
நிதி பேக்கேஜ் அறிவிப்புகள்:
பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை (Economic plans) அறிவிக்க உள்ளார். இந்தியா தற்போது மாபெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்ல போவதாக ஆர்பிஐ (RBI) கணித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்டு இந்த நிதி பேக்கேஜ் அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது.
விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி:
ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம், 28 மாநிலங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு அமைச்சர்கள் இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். நபார்ட் (NABARD) நிதி மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கிஷான் கிரெடிட்:
கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவசரகால கடன் திட்டம் மூலம் 2.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 61 லட்சம் பேருக்கு அவசரகால கடன் திட்டம் (Emergency loan plan) மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,32,800 கோடி வருமான வரி 39.7 லட்சம் பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசரகால ஊக்க கடன் திட்டம் மார்ச் 31, 2021 வரை தொடரும், என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மூங்கிலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
குறைந்தது பருத்தி சாகுபடி! மாற்றுப் பயிர்களில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Share your comments