மத்திய அரசின் பூச்சிக் கொல்லி உருவாக்க தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎஃப்டி (IBFD), ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு மாற்றாகப் உயிரி பூச்சிக் கொல்லியை உருவாக்கியுள்ளது சாதனை படைத்துள்ளது.
ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையின் கீழ் இயங்கும் ஐசிஏஆர் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ளது. இந்த நிறுவனம் தேசிய விதை வாசனைப் பொருட்கள் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்த உயிரி பூச்சிக்கொல்லியை உருவாக்கியுள்ளது.
விதை வாசனைப் பொருட்களான வெந்தயம், சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றில் உள்ள பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இந்த உயிரி பூச்சிக்கொல்லி சிறப்பாக செயல்படுவதாக பூச்சிக்கொல்லி உருவாக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜிதேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் வரை பயன்படுத்தக்கூடிய இந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்துபவருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தாது, நட்பானது என்றும் அவர் மேலும் கூறினார். விதை வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் மீதும் இதை பயன்படுத்தலாம். இந்த உயிரி பூச்சிக்கொல்லி மருந்துக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?
Share your comments