1. செய்திகள்

விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இன்று ஆய்வு!

KJ Staff
KJ Staff

Bipin Rawat Helicopter crash

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 14 பேர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது, இதில் அவர் உட்பட13 பேர் உயிரிழந்தனர். இதில் அதிர்ஷ்டவாசமாக உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 13 பேர் உயிரிழந்த கோர விபத்தில் உயிர் தப்பிய வருண் சிங், கடந்த 2020 ஆம் ஆண்டு LCA தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக சௌர்யா சக்ரா விருது வாங்கியவர் என்பதும் குறிப்பிடதக்கது.

முன்னதாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவிய காரணத்தால் விமானம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. அந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படை நேற்று உத்தரவு வழங்கியது. இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள், விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஹெல்காப்டர் விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளும், விமானப்படை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் விபத்து குறித்து  இன்று விசாரணை நடத்தும்.

மேலும் படிக்க:

இந்தியாவில் பிப்ரவரிக்குள் 3-வது அலை - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

எச்சரிக்கை: தமிழ்நாட்டில் மழையின் அட்டகாசம் தொடரும்!

English Summary: Bipin Rawat Helicopter crash study today!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.