1. செய்திகள்

பாஜக தேர்தல் அறிக்கை, 'சங்கல்ப பத்ரா'

KJ Staff
KJ Staff

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை 'சங்கல்ப பத்ரா' என்ற பெயரில் வெளியிட்டார் அதன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 'சங்கல்ப பத்ரா' என்பதன் பொருள்  'உறுதிமொழிப் பத்திரம்'. நாடு  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டதினை நினைவு கூறும் வைகையில் 75 அம்சங்களை உள்ளடக்கியதாகவும், அவை அனைத்தும்  2020  ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

 12 பேர் அடங்கிய குழு ராஜ்நாத் சிங் தலைமையில் 48 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பலதார பட்ட மக்களை கலந்தாலோசித்து இவ்வறிக்கையானது தயாரிக்க பட்டது, என்றார். 

'சங்கல்ப பத்ராமுக்கியம்சங்கள்

 • கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

 • ஒரு லட்சம் வரை, வட்டியில்லா குறுகிய காலக் கடன், பிரத்தியேகமாக சிறு விவாசகிகளுக்கு.

 • நதிகளை இணைக்கும் திட்டம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.

 • ஜிஎஸ்டி வரி மேலும் எளிமை படுத்தப்படும்.

 • 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புதிய நெடுசாலைகள்.

 • 2022ம் ஆண்டு நிறைவுக்குள் அனைவருக்கும் வீடு.

 • 60 வயதிற்கு மேலான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம்.

 • ஸ்வச்ட் பாரத் திட்டத்தின் படி 100% தூய்மை இந்தியா.

 • இந்தியா முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள்.

 • பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படும்.

 • முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

 • ரூ.25 லட்சம் கோடி கிராமப்புற வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும்.

 • தீவிரவாதத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க படும்.

நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள்  இன்று   'சங்கல்ப பத்ரா'  என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

English Summary: BJP Manifesto 2019

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.