1. செய்திகள்

747 youtube Channels மற்றும் 94 Websites-ஐ முடக்கியது அரசு!

Poonguzhali R
Poonguzhali R
Blocked 747 youtube Channels & 94 Websites: Govt. Info.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தவறான செய்திகள் மற்றும் உள்ளடக்கங்களை வெளியிடும் சமூக ஊடகங்கள் மீது மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும், இதுவரை 747 யூடியூப் சேனல்கள் மற்றும் 94 இணையதளங்களை முடக்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், 2021-22ல் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 URLகள் மீது நடவடிக்கை எடுத்து, அவற்றை முடக்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அமைப்புகள், யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் கடுமையான கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், குறிப்பிட்ட புலனாய்வு உள்ளீடுகளைப் பெற்ற பின்னர் 20 யூடியூப் சேனல்களைத் தடுக்க அமைச்சகம் உத்தரவிட்டது. அதன் பிறகு, அமைச்சகம் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 35 சேனல்களுக்குத் தடை விதித்தது.

இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களுக்குத் தடை விதித்தும், அதன்பின் 16 யூடியூப் சேனல்களுக்கான அணுகலைத் தடை செய்தும் அரசாங்கம் உத்தரவிட்டது.

புதிய விதியால் போலி கணக்குகளுக்கு தடை!

புதிய ஐடி விதிகளால் பல போலி சமூக ஊடகக் கணக்குகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். புதிய விதியின் கீழ், 2021 நவம்பர் மாதத்தில் 17.32 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் முடக்கியது.

தற்போது இந்தியாவில் 42 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர். பயனாளர்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முறைகேட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

வேளாண் செய்திகள்: மானிய விலையில் கத்திரிச் செடிகள்!

வேளாண் செய்திகள்: விவசாய வணிகத்திற்கு புதிய APP வெளியீடு!

English Summary: Blocked 747 youtube Channels & 94 Websites: Govt. Info. Published on: 24 July 2022, 04:36 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.