வீடுகளில் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்டச் செடிகள் நாளடைவில், வீட்டுத் தோட்டமாக உருமாறின. அதில் நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே சாகுபடி செய்து சாப்பிடுவதில்தான் எவ்வளவு சந்தோஷம்.
வீட்டுத் தோட்டம் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்தக் கட்டுரையில் நான் சொல்ல வருவது, தோட்டத்தில் அல்ல, வீட்டிற்குள் வளர்க்கும் மரம். ஆம். சற்று வித்தியாசமான போன்சாய் மரங்கள்.
ஆளுயர மரங்கள் அலாங்காரப் பொருட்களாக, கையளவு மண்தொட்டியில் அப்படியே அச்சு அசலாக வளர்ந்திருக்கும். பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இந்த மரங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவை. குறிப்பாக வீடு மற்றும் அலுவலகங்களில் வைத்துக்கொள்வது கவுரவமாகப் பார்க்கப்படுகிறது.
அதிர்ஷ்டம் வருகிறது என்பதால், மார்க்கெட்டில் இந்த மரங்களை ரூ.250 முதல் ரூ.2500 வரை வாங்க வாடிக்கையாளர்கள் தேடிவருகின்றனர். எனவே அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இந்தத் தொழிலை நாம் கையில் எடுக்கலாம்.
முதலீடு (Investment)
இந்தத் தொழிலை மிகப் சிறிய முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்சமாக 20 ஆயிரம் முதலீடு செய்வதே போதுமானது
விற்பனை யுக்தி (Sale Technic)
நர்சரியில் இருந்து குறைந்த விலைக்கு நாற்றுக்களை கொள்முதல் செய்து வந்து வீட்டிலேயே வளர்க்கலாம். மூன்று ஆண்டுகளில் நாற்றுகள், மரமாக மாறி அழகாக அலங்காரப் பதுமைகளாகக் காட்சியளிக்கும். அதைத்தொடர்ந்து இந்த போன்சாய் மரங்களை விற்று லாபம் சம்பாதிக்கலாம்.
அல்லது பண்ணைகளில் இருந்து நேரடியாக நாற்றுகளைக் கொள்முதல் செய்து, அதனை லாபம் வைத்து கூடுதல் விலைக்கு விற்கலாம்.
லாபம் (Profit)
ஆரம்பத்தில் குறைந்த அளவில் லாபம் கிடைத்தாலும் 3 முதல் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
அரசு மானியம் (Subsidy)
3 வருடங்கள் ஒரு நாற்றை வளர்க்க ரூ.240 வரை செலவாகும். இதில் 50% செலவை அதாவது ரூ.120 யை அரசு மானியமாக வழங்குகிறது.
இடவசதி (Space)
ஒரு ஹெக்டேரில் 1500 முதல் 2500 போன்சாய் மரங்களை வளர்க்கலாம். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதனைத் தொட்டியில் மாற்றி விற்பனைக்கு தயாராகலாம்.
மேலும் படிக்க...
நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!
அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!
இந்த 10 ரூபாய் இருந்தால், அடிக்கப்போகிறது யோகம்- கொட்டப்போகிறது பணம்!
Share your comments