ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து கேட்டபோது, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என்றும் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அது குறித்து நான் எந்தவித கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.
மேலும் நேற்று திருநெல்வேலியில், பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததை குறித்து பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்குவதோடு, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மீது பாலியல் குற்றச்சாட்டு அதிகரிப்பது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், நான் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments