Breaking: Petrol, diesel price reduction: Government's important announcement!
மும்பை: மாநில குடிமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுநலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில், மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசு தீர்மானம் மேற்கொண்டது.
இதனால் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3ம் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் மாநிலத்தில் போக்குவரத்து செலவு குறைவதுடன் பணவீக்கமும் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.3ம் குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: #Rupee: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிவு
இதனால் மாநில அரசின் கருவூலத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் சுமை ஏற்படும் என்பதும் குறிப்பிடதக்கது. மத்திய அரசு வரியை குறைத்ததை அடுத்து மாநிலங்களும் வரி குறைப்புக்கு முறையிட்டன. இதையடுத்து, மகாராஷ்டிரா அரசும் மாநில வரிகளை குறைத்துள்ளது.
மேலும் படிக்க:
தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்த, விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி"
TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!
Share your comments