ஒடிசாவில் முதல்முறையாக தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் புவனேஸ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதல் தாய்ப்பால் வங்கியான இதை திறந்து வைத்தார் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் லட்சுமிதர் சாஹு.
தாய்ப்பால் வங்கி (Mother Milk Bank)
பிறந்த குழந்தைக்கு அடிப்படை உணவு தாய்ப்பால். சில தாய்மார்களுக்கு பால் அதிகமாகச் சுரக்காமல் போய்விடும். பிரசவத்தில் தாயை இழக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காது. இவற்றை சமாளிக்கும் நோக்கில், மாநிலத்தில் முதல்முறையாக தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது. தாய்மார்களிடமிருந்து பாலை தானமாக பெற்று, அதை பதப்படுத்தி, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்து சற்று குறைவாக இருக்கும் என்பதை தவிர, வேறு எந்த பிரச்னையும் இல்லை. மேலும், இரத்த தானம் பெறுவதை விட தாய்ப்பால் தானம் பெறுவது எளிது. மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.
தாய்ப்பால் வங்கியின் மூலம், எண்ணற்ற பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது ஒடிசா அரசு. இத்திட்டம் நாடு முழுவதும் விரிவடைய வேண்டும்.
மேலும் படிக்க
சூரியகாந்தி எண்ணெய் கிடைக்காதாம்: வேற எண்ணெய்க்கு இப்பவே மாறிடுங்க!
உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்தால் புகார் அளிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்!
Share your comments