இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பொதுத்துறை நிறுவங்களில் பி.எஸ்.என்.எல்- லும் ஒன்று. தொலைத்தொடர்பு நிறுவனமான இது பல ஆண்டுகளாக தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
ரிலைன்ஸ் ஜியோ, போன்ற தனியார் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள், புதிய தொழில்நுட்பம் போன்ற காரணங்களினால் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என.எல் - ன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைய தொடங்கிவிட்டனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியினை சந்தித்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். நிறுவனத்தின் வருவாயில் 55% ஊழியர்களின் சம்பளதிற்காக செலவிட படுகிறது. இவற்றை சமாளிக்க அதிரடியாக சில முடிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக ஓய்வு பெரும் வயதை 60 - ல் இருந்து 58- ஆக குறைக்க உள்ளது. மேலும் 50 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் போன்றவற்றை செயல் படுத்தவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அமுல்படுத்தபடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Share your comments