1. செய்திகள்

விழித்தெழு பெண்ணே போதும் இந்த நாயிகள் வேட்டையாடியது

KJ Staff
KJ Staff

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற இந்த வார்த்தை முழுமையாக பொய்யாகி விட்டது என்றே கூறலாம்.

டெல்லி கூட்டு பாலியல் கொடூரம், அருப்புக்கோட்டை நிர்மலா தேவி பிரச்சனை, ஆசிபா கூட்டு பாலியல் கொடூரம், மலம் கழிக்க சென்ற பெண்ணின் பாலியல் கொடூரம், பொள்ளாச்சி பாலியல் கொடூரம், 6 வயது சிறுமி பாலியல் கொடூரம்,

பாலியல் கொடூரம்

எதற்கு நமக்கு இப்படி போன்ற சூழ்நிலை? யார் ஏற்படுத்திக்கொள்வது? இத்தகைய சூழ்நிலையால் பெண்கள் மறுபடியும் வீட்டிற்குள் முடக்கப்படுவோமா? அரசாங்கம் என்ன செய்கிறது? நமக்கு யார் காவல்? மீண்டும் பெண்களுக்கு எதிராக கொடூரம் அதிகரிக்குமா? காரணம்? இந்நிலை மாறுமா?  கடுமையான சட்டங்கள் விதிக்கப்படுமா?

பெண்ணடிமை நீங்கி இன்றைய நிலையில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக அணைத்து துறைகளிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிராக மாறிக்கொண்டிருக்கும் இந்த கொடூர சூழ்நிலையை எந்த சட்ட திட்டங்களைக்கொண்டு நம்மால் எதிர் கொள்ள முடியும். சமூக வலைத்தளங்கள் நம்மை அதற்குள் மூழ்க வைத்து விட்டது. விஞ்ஞானம் நம்மை வளர்த்துக்கொள்ள மட்டுமே  அதையே வாழ்க்கை ஆக்கி நம்மை நாமே அளித்துக்கு கொள்ள அல்ல.பெண்ணாக இருப்பதால் நாம் எந்த வகையிலும் குறைந்தவர்களாக ஆகிவிட மாட்டோம்.

எப்படி குழந்தையிடம் யார் எதை கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கிறோமோ அதை போல பெண்கள் நாமும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முகம் தெரியாத நமபர்களிடம் பேசுவதை, பழகுவதை தவிர்த்தாலேயே பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர சூழ்நிலைகளை எதிகொள்ளலாம். முகம் தெரியாத நண்பர்களுடன் நட்பு வைத்து பேசி பழகுவதால் விருதோ அல்லது வாழ்வில் முன்னேற்றமோ கிடைக்கபோவது இல்லை. நமக்கு நாமே காவல் , நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாம் சரியான பாதையில் செல்கிறோமா எச்சூழலையும் எதிர்கொள்ளலாம். நம்மை பெற்று ஆசை ஆசையாக வளர்க்கும் பெற்றோர்களுக்கு இத்தகைய கொடூர சூழல் அவர்களை நடை பிணமாக மாற்றுகிறது. பெண்களுக்கு எதிரே மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பெற்றோர்களின் நிலைமை பள்ளிக்கு ,கல்லூரிக்கு,வேலைக்கு சென்ற நம் பெண் நல்ல நிலைமையில்  வீடு திரும்பினாள் போதும் என்று வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.பெண் சக்தி எத்தனை பெரிது என்பதை மறந்து காமக்கொடூரர்களிடம் நம்மை நாமே பகடையாகிக்கொண்டிருக்கிறோம்.

காரணமும் தீர்வும் நம்மிடமே உள்ளது. எவருக்கும் நாம் அடிமை இல்லை. துணிந்து முன்னேறி வாழ்வை வென்று எதையும் வெல்லக்கூடிய சக்தியை கொண்டவளாக பெண் இருக்கிறாள் என்பதை இத்தகைய மிருகங்களுக்கு நாம் உணர்த்தவேண்டும். விழித்தெழுவோம், இனியும் இத்தகைய கொடூர நிகழ்வுகள் எற்படாத வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வோம். முன்னேறிச்செல். இனியும் இந்த கொடூர நாயிகளுக்கு நாம் இரையாக வேண்டாம். 

English Summary: These dogs were hunted enough by the Awakening Girl

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.