1. செய்திகள்

Budget 2021: விலை உயரப்போவது எது..? விலை குறையப்போவது எது..?

Daisy Rose Mary
Daisy Rose Mary
Union budget 2021

Credit : Business today

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு தனது 9-வது நிதி நிலை அறிக்கையை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கோரோனா தொற்று, விவசாயிகள் போராட்டம், தேர்தல் உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன? எதன் மீதான விலை உயரும், எதன் மீதான விலை குறையும் என்பன உள்ளிட்டவைகளை இங்கு விரிவாக பார்கலாம்...

புதிய திட்டங்களுடன் பட்ஜெட் தாக்கல்

ஆறு தூண்களாகப் பிரிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் 2021-22ம் ஆண்டுக்கான பல புதிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு ரூ. 35,000 கோடி, மின் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி, வேளாண்துறைக்கான கடன் ரூ16.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ .3,768 கோடி, அனைவருக்கும் மலிவு வீட்டுவசதி திட்டங்கள் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்த பட்ஜெட் அறிவிபைத் தொடர்ந்து, வரும் நாட்களில் எதன் விலை உயரும் எதன் விலை குறையும் என்பதை பார்போம்...

விலை அதிகரிக்கும் அம்சங்கள்

 • மொபைல்போன் - Mobile phones

 • மொபைல் சார்ஜர் - Phone charger

 • பவர்பேங்க் - Power bank

 • பருத்தி ஆடைகள் - Cotton clothes

 • சூரிய இன்வெர்ட்டர்கள் - Solar inverter

 • ரத்தினக் கற்கள் - Gemstones

 • பருப்பு வகைகள் - Pulses

 • செப்பு பாத்திரங்கள் - Copper utensils

 • யூரியா - Urea

 • வாகன உபகரனங்கள் - Auto Parts

விலை குறையும் அம்சங்கள்

 • பெயிண்ட் - Paint

 • ஸ்டீல் பாத்திரங்கள் - Steel Utensils

 • மின்சாரம் - Electricity

 • காலணிகள் - Shoes

 • நைலான் - Nylon

 • தங்கம், வெள்ளி - Gold, silver

 • காப்பீடு - Insurance

 • உலர் சலவை - Dry cleaning

 • லெதர் பொருட்கள் - Leather goods

 • விவசாய உபகரணங்கள் - Agricultural equipment

பட்ஜெட் 2021 - வருமான வரி குறித்த சிறப்பம்சங்கள்!

வரி செலுத்துவோர் மீது குறைந்தபட்ச சுமையை வைக்க வேண்டும் என்று சீதாராமன் கூறியுள்ளார். இருப்பினும், வருமான வரி ஸ்லாப் விகிதங்களில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதிலிருந்து 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற என்.ஆர்.ஐ-க்களுக்கும் பட்ஜெட்டில் சில நல்ல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க...

மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன்! தமிழகத்தில் கடற்பாசி பூங்கா!

மத்திய பட்ஜெட் 2021 - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட்! பிரதமர் மோடி புகழாரம்!

 

English Summary: Budget 2021- 2022 special highlights : what are the things to increase the price and which things are reduce!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.