கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமல்படுத்தப்படும் ஞாயிறு முழுஊரடங்கை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை சென்னையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழுஊரடங்கு (Full Lockdown)
ஒமிக்ரான் அச்சத்தின் பிடியில் மக்கள் சிக்கித்தவித்த நிலையில், கொரோனாப் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 600க்கும் கீழ் இறங்கியத் தினசரிக் கொரோனா பாதிப்பு தற்போது, 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பஸ்கள் ஓடாது (Buses do not run)
சென்னையில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் 2,500 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும். இந்தப் பேருந்துகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படுகின்றன.
டிக்கெட் அவசியம் (Tickets required)
இதே போல ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை ஏற்றி செல்லக்கூடிய எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
விமானம், ரயில் பயணம் மேற்கொள்ளுபவர்கள் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்லலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. பயணத்தின்போது அதற்கான டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரயில்களும், இரவு நேரங்களில் புறப்படக்கூடிய ரயில்களும் வழக்கம் போல் இயங்கும்.
ரயில் (Train)
மெட்ரோ ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
மின்சார ரயில்களைப் பொறுத்தவரை 50 சதவீதம் இயக்கப்படுகின்றன. 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவிலான சேவை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
120 ரயில்கள் (120 trains)
சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 113 ரயில்களும், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டிக்கு 60 சேவைகளும், கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 சேவைகளும், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 120 ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் முழு அளவில் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரயில்களும், இரவு நேரங்களில் புறப்படக்கூடிய ரயில்களும் வழக்கம் போல் இயங்குகிறது. ரயில் நிலையங்களில் வாடகை ஆட்டோ, கார்கள் பயணிகளின் பயணத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
இரவு நேர ஊரடங்கால் 50 லட்சம் முட்டைகள் தேக்கம்- விலைகுறைய வாய்ப்பு!
Share your comments