2020-21ஆம் ஆண்டுக்கான கரும்புப் பருவத்தில் கரும்புக்கு, சர்க்கரை ஆலைகள் அளிக்கவேண்டிய நியாயமான லாபகரமான விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2020-21 கரும்புப் பருவம் (அக்டோபர் -செப்டம்பர்) பருவத்திற்கு சர்க்கரை ஆலைகள் அளிக்கும் கரும்புக்கான நியாயமான இலாபகரமான விலைக்கு (Fair and Remunerative Price) வேளாண் பொருள்களுக்கான மதிப்பு, விலைகள் ஆணையம் (Commission for Agricultural Costs and Prices) அளித்த பரிந்துரைகளின் படி பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது
2020-21-கான விலை நிர்ணயம்
2020- 21 கரும்பு பருவத்திற்கான கரும்பின் லாபகரமான விலை குவிண்டால் (quintal) ஒன்றுக்கு 285 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அடிப்படை மீட்பு விகிதம் 10 சதவீதமாகும்.மீட்பு விகிதத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தால் ஒவ்வொரு சதவிகிதத்திற்கும் ஒவ்வொரு குவின்டாலுக்கும் 0.1 சதவிகிதம் அதிகம் அதாவது குவிண்டால் ஒன்றுக்கு 2.85 ரூபாய் கூடுதல் தொகை கிடைக்கும்.
Read This
கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை கிலோவுக்கு ரூ.125 ஆக நிர்ணயம் செய்யவேண்டும்
அடிப்படை மீட்பு விகிதம் குறைந்தால் ஒவ்வொரு குவிண்டாலுக்கும் 0.1 சதவீதம் குறைவாக, அதாவது நியாயமான லாபகரமான விலையிலிருந்து 2.85 ரூபாய் குறைவாக வழங்கப்படும்.
இது 10 சதவீதத்திற்கும் குறைவாக, ஆனால் 9.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள ஆலைகளுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9.5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விலை, குவிண்டால் ஒன்றுக்கு 270.75 ரூபாயாக விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமான, இலாபகரமான விலை நிர்ணையம்
கரும்பு விளைவிக்கும் உழவர்களுக்கு, அவர்களது வேளாண் பொருள்களுக்கு நியாயமான, இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கரும்புக் கட்டுப்பாடு ஆணை, 1966படி, இந்த நியாயமான, இலாபகரமான விலை நிர்ணயிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் ஒரே சீராக நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் பிடிக்க..
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைப்பொருள் : விழுப்புரத்தில் வேர்க்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியம்!!
Share your comments