பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய அரசு பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த பின்னர் நடைபெறும் முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
இந்தியாவில் கடும் உழைப்பாளிகளான விவசாயிகள், சிறு-குறு, நடுத்தரத் தொழில் நிறுவனப்பிரிவினர் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
MSME (Ministry of Micro, Small and Medium Enterprises) என்றழைக்கப்படும் சிறு-குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அமைதியாக செயலாற்றும் ஆறு கோடிக்கும் மேற்பட்ட MSMEகள் வலுவான தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு மிக முக்கிய பங்காற்றி வருகின்றன.
ஆத்மா நிர்பார் பாரத் அபியான் (Atmanirbhar bharat abhiyan) சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகளில் MSME-க்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்தப் பொருளாதாரத் தொகுப்பின் கீழ் MSME பிரிவுக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் சிறு-குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பிரிவுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இதர அறிவிப்புகளை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு முன்வைத்துள்ளது.
சிறு-குறு நிறுவனங்களுக்கு ரூ.2000 கோடி!
-
இதன்படி சிறு-குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளைத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.எளிய முறையில் வர்த்தகம் செய்வதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று. இதன் மூலம் MSME பிரிவில் முதலீட்டை ஈர்க்க முடியும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
-
நலிவுற்ற சிறு-குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு மூலதன ஆதரவு அளிப்பதற்காக, பிணையில்லா துணைக் கடன் வழங்குவதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
-
நலிவுற்ற இரண்டு லட்சம் சிறு-குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் பயனடையும் நிதியத்திற்கான நிதிக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளிப்பதற்கான தீர்மானத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
-
நடுத்தர தொழில்களுக்கான முதலீடு 50 கோடி ரூபாயாகவும், வருட வர்த்தகம் 250 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் கடன்!
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம், தெருவோர வியாபாரிகள் நலனுக்காக, ஆத்ம நிர்பார் நிதித் (PM Street Vendors Atma Nirbhar Nidhi) திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம்வரை கடன் வழங்கப்படும். அதை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். அபராத நடவடிக்கை கிடையாது. சுதந்திரத்துக்கு பிறகு சாலையோர வியாபாரிகளுக்காக இத்தகைய திட்டம் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு பலனளிக்கும்.
பயிர்களுக்கான ஆதார விலை!
வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 14 பயிர்களுக்கான 2020-21 கரிப் பருவ குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 14 பயிர்களுக்கான அசல் விலை மீதான வருவாய் 50 சதவீதத்தில் இருந்து 83 சதவீதம் வரை ஆகும்.
வேளாண் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளுக்காக வங்கிகள் அளித்த ரூ 3 லட்சம் வரையிலான அனைத்து குறுகிய காலக் கடன்களின் திரும்பச் செலுத்துதல் தேதியை 31.08.2020 வரை நீட்டிக்கவும் இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!
சுய-சார்பு இந்தியாத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் இலவச உணவு தானியங்கள், அவர்களின் தங்கும் வசதிக்காக கட்டுப்படியாகக் கூடிய வகையில் புதிய வாடகைத் திட்டம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
80 கோடி மக்களுக்கு உணவு உறுதி செய்வது, 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் பட்டுவாடா செய்வது, மூத்த குடிமக்கள், ஏழை விதவைகள் மற்றும் ஏழை மாற்றுத் திறனாளிகளின் கைகளில் பணத்தை வழங்குவது, பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் பயனாளிகளுக்குத் தவணையை முன்கூட்டியே அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு உதவும் வகையில், ரூ.71.21 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன்
நூறு நாள் வேலைத் திட்டம் : கூலியை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் - முதல்வர் உத்தரவு!
ரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - அமைச்சர் செல்லூர் ராஜூ!!
Share your comments