1. செய்திகள்

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார் யார் ? யாருக்கு எந்த துறை கொடுக்க பட்டுள்ளது? முழு விவரங்கள் இதோ

KJ Staff
KJ Staff

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைகிறது தேசிய மக்கள் கூட்டணி.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவித் முன்னிலையில் மோடி மற்றும் 57  அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.

நேற்று  நடை பெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், அவர்களுக்கான இலாக்காக்கள் மற்றும் புதிய அமைச்சரவை ஆகியன குறித்து முடிவுகள் எடுக்க பட்டன. அமித்ஷா முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் இரண்டு அல்லது மூன்று இலாக்காக்கள் ஒதுக்க பட்டுள்ளன. அமைச்சரவை மற்றும் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் இலாக்காக்கள்  பற்றிய முழுவிவரங்கள் இதோ

மத்திய அமைச்சர்கள் மற்றும் இலாக்காக்கள் 

  • நரேந்திர மோடி - அணுசக்தி, விண்வெளி, ஒய்வூதியம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறை
  • அமித்ஷா - உள்துறை அமைச்சகம்
  • ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை அமைச்சகம்
  • நிதின் கட்கரி - சாலை மற்றும் போக்குவரத்துத்துறை
  • நிர்மலா சீதாராமன் - நிதித்துறை அமைச்சகம்
  • ஸ்மிர்தி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • ஜெயசங்கர் - வெளியுறவுத் துறை
  • ராம்விலாஸ் பஸ்வான் - உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
  • பிரலஹத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரத்துறை, நிலக்கரி, சுரங்கத்துறை
  • அர்ஜுன் முண்டா - பழங்குடியினர் விவகாரத்துறை
  • அரவிந்த் சாவந்த் - கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள் துறை
  • தர்மேந்திரா பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு , எஃகு துறை
  • Dr.ஹர்ஷ வரதன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம் , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் புவி அறிவியல் துறை
  • மகேந்திர நாத் பாண்டே - திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் துறை
  • சுப்ரமணியம் ஜெய் சங்கர் - வெளியுறவு துறை
  • சதானந்த கவுடா - உரங்கள் மற்றும் ரசாயன துறை
  • கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல் சக்தி துறை
  • கிரிராஜ் சிங் - பால் வளம்  மற்றும்  மீன்வளர்ப்பு துறை
  • ஹர்சிம்ரத் கவுர் பதால் - உணவு பதப்படுத்துதல் துறை
  • முக்தர் அப்பாஸ் நாகிவி - சிறும்பான்மையோர் விவகாரம் துறை
  • நரேந்திர சிங் தோமர - விவசாயம் மற்றும் விவாசகிகள் நலன், கிராமப்புற நலன் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
  • பிரகாஷ் ஜவதேவ்கர் - சுற்றுசூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம், தகவல் மற்றும் தொழில்நுட்பம்
  • Dr.ரமேஷ் போக்கிரியால் - மனிதவள மேம்பாடு துறை
  • தவர் சந்த் கெஹ்லட் - சமூக நீதி துறை     

     

    Anitha Jegadeesan

    Krishi Jagran

English Summary: Cabinet Ministers Of India 2019: Newly Amit Shah Joins The Cabinet As A Home Minister: Full List Of Cabinet Published on: 01 June 2019, 01:15 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.