செங்கல்பட்டு மாவட்டத்தித்தில் உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அழிச்சாட்டியம் செய்துவந்த, 300க்கும் மேற்பட்ட குரங்குகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை எடுத்த நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டினர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், உட்பட பல பகுதிகளில், குரங்குகள் கூட்டமாக திரிவது அதிகரித்தது. கடை வீதியில் பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களிடமிருந்து பையை பறிப்பது, வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது, சமைத்த உணவுகளை துாக்கி செல்வது போன்ற அட்டகாசங்களை, குரங்குகள் செய்து வந்தன.
உணவுப் பொறி
இதையடுத்து, குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.குரங்குகளை பிடிப்பதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றோர் மூலம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கூண்டிலும் இரை
குரங்குகளுக்கு பிடித்தமான வேர்க்கடலை, தேங்காய், வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை, குரங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சிறிய அளவு வீசி, மீதம் உள்ளவற்றை இரும்பு கூண்டுக்குள் வைத்துவிட்டனர்.
இவற்றை உண்பதற்காக, குரங்குகள் ஒவ்வொன்றாக இரை தேடி கூண்டுக்குள் வந்ததும், வனக்காவலர் கூண்டுகளை மூடிவிட்டார்.
300 குரங்குகள்
இதன்மூலம் இரு நாட்களில் 300க்கும் மேற்பட்ட குரங்குகளை, கூண்டு வைத்து பிடித்து உள்ளனர்.பிடிபட்ட குரங்குகளை, வனப் பகுதிக்குள் விடுவதற்கு, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க...
Share your comments