பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, 'ஓலா, உபர்' நிறுவன 'கால் டாக்சி'களில் 14 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் சிரமத்தில் இருக்க, கால் டாக்சிகளின் கட்டண உயர்வு மேலும் சிரமத்தை அளிக்கும்.
கால் டாக்சி (Call Taxi)
ஓலா நிறுவன கார் ஓட்டுனர்கள் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, 14 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு வழங்கப்படும் தொகையும் உயரும். குறிப்பாக, ஒரு கி.மீ.,க்கு தற்போது 15 ரூபாய் வழங்கப்படுவது, கட்டண உயர்வுக்கு பின், 17 ரூபாய் ஆகலாம்' என்றனர்.
சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச் செயலர் ஜூட் மேத்யூ கூறியதாவது: ஓலா, உபர் நிறுவனங்களில், நிரந்தர கட்டணம் கிடையாது. முக்கியமான நேரங்களில் மற்றும் தேவையின் அடிப்படையில் கட்டணம் அடிக்கடி மாறியபடி இருக்கிறது.
தற்போது, கட்டண உயர்வு அறிவித்தாலும், அதுவும் அந்த நேரத்தில் தாறுமாறாக உயர்த்தப்படும். எனவே, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் இருப்பதுபோல், தனியார் கால் டாக்சிகளுக்கு, அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments