1. செய்திகள்

முகாம்: 8 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya

Camp: Employment for all from 8th standard to graduates

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களில் இணைந்து 28 அக்டோபர் 2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவ ராவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு

English Summary: Camp: Employment for all from 8th standard to graduates

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.