பொங்கல் பரிசுடன், கரும்பு வழங்க வேண்டியிருப்பதால், கூட்டுறவுத் துறையினர், கரும்பு விவசாயிகளை (Sugarcane farmers) தேடிப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பரிசுடன் கரும்பு:
தமிழக அரசு, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு பொருட்கள் (Pongal Gift) வழங்க உத்தரவிட்டு உள்ளது. மாநிலத்தில், 2.10 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு பொருள் வழங்கப்பட உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, பயனாளிகளுக்கு, இரண்டு அடி நீளமுள்ள கரும்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு, ஒரு முழுநீள கரும்பு வழங்கப்படுமென, அரசு அறிவித்துள்ளது.
கரும்பு கொள்முதல்
கரும்பு கொள்முதலுக்கு (Purchase) மட்டும், 61.90 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஏற்றுதல் மற்றும் இறக்குக்கூலி, லாரி வாடகை என, இதர செலவுகளையும் சமாளித்து, கரும்பு கொள்முதல் செய்ய, தலா, 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கொள்முதல் செய்ததை காட்டிலும், மூன்று மடங்கு அதிகம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு பொங்கலுக்கு, 2.6 கோடி கரும்புகள் கொள்முதல் செய்ய வேண்டும். பயிர்க்கடன் (crop loan) பெற்ற, கரும்பு விவசாயிகள் விபரத்தை பெற்று, நேரில் சென்று கரும்பு கொள்முதல் செய்யப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (Start-up Agricultural Cooperative Credit Unions) மூலம், கரும்பு விவசாயிகளை தேடிப்பிடிக்கும் பணி துவங்கியுள்ளது என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறினர்.
பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது விவசாயி விளைவிக்கும் கரும்பு தான். தமிழக அரசு பொங்கல் பரிசுடன் கரும்பு கொடுக்கவிருப்பதால், கரும்பு கொள்முதல் அதிகரிக்கும். இதனால், எண்ணற்ற கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!
Share your comments