போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் (Fundamental rights) அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே (S.A. Popte) தெரிவித்துள்ளார்.
சமரச குழு:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை (Welfare Petition) சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சமரச குழு (Compromise Committee) அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
போராடும் உரிமை:
விவசாயிகள் நடத்தும் போராட்டம் பற்றி, 2-வது நாளாக விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும் இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க (Protect) நினைக்கிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் வேளாண் சட்டங்களுக்கு (Agricultural Laws) எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!
விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை!
Share your comments