கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகல் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளனர். அதை தவிர்க்கும் பொருட்டு ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பைப் மூலம் தண்ணீ் தெளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
ஏலக்காய்க்கு உகந்த நிலப்பகுதி
கேரள-தமிழக எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இங்கு ஏல விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதி தண்ணீர் அதிகம் தேங்காத சரிவுப்பகுதியாக அமைந்துள்ளதால் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மேலும் ஈரக்காற்றும், குறைவான வெப்பமும் கொண்ட பருவநிலை உள்ளதால் தரமான ஏலக்காய் இங்கு விளைகின்றன.
வெயிலுக்கு தாங்காத ஏலச்செடி
ஏலக்காய் செடிகள் பொதுவாக பருவகாலங்களில் 20 முதல் 25 டிகிரி வெப்பநிலையையும், குளிர்காலத்தில் 12 முதல் 15 டிகிரி வெப்பநிலை வரையும் தாங்கக் கூடியது. வெப்பத்தில் செடி கருகாமல் இருக்க முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக ஏலத்தோட்டங்களுக்கு இடையே பலா உள்ளிட்ட மரங்களை வளர்ப்பர். இதன் நிழல் மூலம் அதிக வெயிலில் இருந்து ஏலச்செடிகள் காப்பாற்றப்படும்.
கொளுத்தும் கோடை வெயில்
தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வருகிறது. கோடைக்கு முன்பே துவங்கிய இந்த வெப்பத்தினால் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன. கோடைமழையின் போது பெய்யும் மழை இதன் வளர்ச்சிக்கு உகந்தது. ஆனால் தற்போது மழை இல்லாமலும், அதிக வெப்பநிலையை எதிர் கொள்ள முடியாமலும் ஏலக்காய் செடிகளின் இலைகள் கருகத் தொடங்கி உள்ளன.
எனவே ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கிணறுகளில் இருந்து பிளாஸ்டிக் பைப் மூலம் செடிகளின் மேலே தெளித்து அதன் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
மேலும் படிக்க....
Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!
பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!
Share your comments