TNAU வழங்கும் முதுகலை பட்டதாரி படிப்புகள் மற்றும் BIRAC-இன் ஆதரவுடன் இயங்கும் E- YUVA மையத்தின் (தாவர உயிரி தொழில்நுட்பத் துறை), (தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையம்) சார்பில் "Agri PitchFest 2023" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் வேளாண் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த போட்டியானது நேற்று நடைப்பெற்றது.
TNAU-இல் நடைப்பெற்ற இந்த நிகழ்வில், தற்போதைய சூழ்நிலையில் நிலவும் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சில அழுத்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்கு ஒரு உத்வேகத்தை கொடுப்பதற்கும், திறமைமிக்க இளம் நபர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. TNAU கல்லூரி மற்றும் அதன் உறுப்புக்கல்லூரியினை 30 மாணவர் அணிகள் போட்டிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் வேளாண் துறையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தாங்கள் கண்டறிந்த புதுமையான தீர்வுகளை போட்டிக்கு சமர்ப்பித்திருந்தனர். முதற்கட்டத் திரையிடலுக்குப் பிறகு, இறுதிச் சுற்றுக்கு 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
முதுகலை பட்டதாரிகளின் பள்ளியின் டீன் (SPGS-School of Post Graduate Studies ) மற்றும் TNAU-வின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநருமான, டாக்டர். என். செந்தில் நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ” சமூகத்தில் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதுமையான யோசனைகளுடன் வருகை தந்திருந்த இளம் தலைமுறையினரையும் ஊக்குவித்தார்”. மேலும், “TNAU இன் E-YUVA மையமானது, UG, முதுகலை மாணவர்களுக்கு அவர்களின் புதுமையான யோசனைகளை மேம்படுத்திட உதவுகிறது. ஸ்டார்ட்அப்கள் மற்றும் வேளாண் வணிக தொழில்முனைவோருக்கு TNAU சார்பில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது."
" TNAU-வின் துணைவேந்தரின் தொலைநோக்குப் பார்வையை மேற்கோள் காட்டி, மாணவர்கள்- தொழில் முனைவோர்களாக மாறி ஸ்டார்ட்அப் செயல்பாடுகளில் இந்தியாவை முன்னணியில் கொண்டு செல்ல வேண்டும்” எனவும் அறிவுறுத்தினார்.
ஈரோட்டிலுள்ள கிரெனெரா நியூட்ரியண்ட்ஸ் (பி) லிட் நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில் ரமேஷ் சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், “தொழில்முனைவோர் ஆக விரும்பும் மாணவர்களுக்கு மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.
- முன்மொழியப்பட்ட புதுமையான யோசனைகள் உலகில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க வகையில் இருக்க வேண்டும்.
- திட்டத்திற்கான ஆரம்ப நிதியை வங்கிகள்/ முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட வேண்டும்.
- முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டுவது, தயாரிப்புக்கான தேவையை உணர்த்துவதாகவும், பிரபலப்படுத்தவும் உதவும்.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து, இறுதிப்போட்டிக்கு தேர்வான 12 மாணவர் குழுக்கள் தங்களின் யோசனைகளை நடுவர்களிடம் வழங்கினர். இந்த யோசனைகளில் தேங்காய் பாலில் இருந்து புதிய உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து உயிர் பேக்கேஜிங் பொருட்கள், உணவு தானியங்களின் தர சேமிப்பு போன்றவை அடங்கும்.
மூன்று சிறந்த யோசனைகளுக்கு (Rehumane, Molecular Maestros & Biomilk pack innovators) ரொக்கப் பரிசுகள் முறையே ரூ.5000/-, ரூ.3000/- மற்றும் ரூ.2000/- வழங்கப்பட்டன. முதலிடம் ஏசி&ஆர்ஐ, மதுரை வளாகம், இரண்டாம் இடம் ஏசி&ஆர்ஐ, கோவை வளாகம், மூன்றாம் இடம் ஏஇசி&ஆர்ஐ, கோவை.
Read more:
பத்திரிக்கையாளர் டூ விவசாயம்- பசுமைக்குடில் மூலம் லட்சங்களில் வருமானம்
Share your comments