1. செய்திகள்

CBSE 10th 12th Term-2 Result 2022: இந்த செயலிகளில் பார்க்கலாம், லிஸ்ட் இதோ!

Deiva Bindhiya
Deiva Bindhiya
CBSE 10th 12th Term-2 Result 2022

CBSE முடிவுகள் cbseresults.nic.in: CBSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு Term-2 தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 4, 2022 அன்று வெளியிடப்படும். இருப்பினும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடாத நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மதிப்பீட்டு செயல்முறை நடந்து வருவதாகவும், ஜூலை இறுதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான தேதி மற்றும் நேரம் அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. 

CBSE 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் அதாவது (Term 1 - Term 2) கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியாகாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13 ஆம் தேதி வெளீயீடப்படும் எனவும் - 12 ஆம் வகுப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும்  என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக CBSE-இன் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், மதிப்பீட்டு செயல்முறை அட்டவணைப்படி நடந்து வருவதாகவும், முடிவு தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். " அட்டவணையை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதையில் வாரியம் உள்ளது. பல்வேறு நிறுவனங்களின் UG சேர்க்கை அட்டவணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன மற்றும் CBSE அதன் மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

TNEB: விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

CBSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவைச் சரிபார்க்க இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு தகவல் இதோ:

cbseresults.nic.in
results.gov.in
digilocker.gov.in
DigiLocker App
UMANG App

புதிய தகவல்: கூட்டுறவு வங்கியின் வாயிலாக ரூ. 1000 உதவித்தொகை!

CBSE Term 1 மற்றும் Term 2 முடிவுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

  • CBSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவைப் பார்க்க, முதலில் cbse.gov.in அல்லது cbseresults.nic.in அல்லது digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவு இணைப்புகள் முகப்பு பக்கத்தில் கிடைக்க பெறுவீர்கள்.
  • உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்து, உள்நுழைவு விவரங்களை உள்ளீட்டு சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் CBSE முடிவைச் சரிபார்த்து, முடிவின் (Printout)பிரிண்ட்அவுட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க:

ட்ரோன்களை வாங்க, 40 முதல் 75% வரை அரசு மானியம் வழங்குகிறது

குடியரசுத் தலைவர் தேர்தல் -ரிசர்வ வங்கியிடம் கடன் கேட்ட வேட்பாளர்!

English Summary: CBSE 10th 12th Term-2 Result 2022: Check on these apps, here is the list! Published on: 04 July 2022, 09:56 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.